Thiruvalluvar
திருக்குறள்

இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக – குறள்: 712

இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர். – குறள்: 712 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின்நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொற்களின் வழக்காற்றை யறிந்த நல்லறிஞர் ; அவையிற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் – குறள்: 713

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகைஅறியார் வல்லதூஉம் இல். – குறள்: 713 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் பேசும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் – குறள்: 714

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல். – குறள்: 714 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன்விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்புபோல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே – குறள்: 715

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. – குறள்: 715 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல்பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்தநலனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவால் தம்மினும் மிக்கோ [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே – குறள்: 716

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. – குறள்: 716 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும்உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க – குறள்: 719

புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்நன்குசெலச் சொல்லு வார். – குறள்: 719 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச்சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ளஅவையில் அறவே பேசாமலிருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் – குறள்: 720

அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல். – குறள்: 720 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது,தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல்லாதா ரவைக்கண் நிகழ்த்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் – குறள்: 721

வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின்தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 721 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லின் தொகுதியை யறிந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் – குறள்: 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். – குறள்: 722 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துச் சாவார் எளியர் – குறள்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். – குறள்: 723 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும்எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்க்களத்துள் அஞ்சாது [ மேலும் படிக்க …]