Thiruvalluvar
திருக்குறள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – குறள்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை -உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்குஇவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருட் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் – குறள்: 248

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளைஇழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஏதேனும் ஒரு வகையிற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் – குறள்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலியார்முன் தன்னை நினைக்கதான் – குறள்: 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து. – குறள்: 250 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்குஇருப்பதை மறந்துவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் – குறள்: 445

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். – குறள்: 445 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மந்திரிமாரைக் கண்ணாகக் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக – குறள்: 446

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை – குறள்: 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர். – குறள்: 447 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்றுநடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிப்பாரை இல்லாத ஏமரா – குறள்: 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்சார்புஇலார்க்கு இல்லை நிலை. – குறள்: 449 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். ஞா. [ மேலும் படிக்க …]