செய்தக்க அல்ல செயக்கெடும் – குறள்: 466

செய்தக்க

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
– குறள்: 466

– அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் தன் வினைக்குச் செய்யத்தகாதன வற்றைச் செய்யின் கெடுவான். இனி , அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமையானுங் கெடுவான் .



மு.வரதராசனார் உரை

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.



G.U. Pope’s Translation

‘Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.

– Thirukkural: 466, Acting After Due Consideration, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.