நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
– குறள்: 782

– அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால்



கலைஞர் உரை

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி
முழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ
முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து
போகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவுடைய மேலோர் நட்புக்கள் வளர்பிறைத் தன்மையுடையனவாய் மேன்மேலும் வளர்ந்து வருவனவாம்; அறிவில்லாத கீழோர் நட்புக்கள் தேய்பிறைத் தன்மையுடையனவாய் வரவரத் தேய்ந்து வருவனவாம்.



மு. வரதராசனார் உரை

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன



G.U. Pope’s Translation

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

 – Thirukkural: 782, Friendship, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.