குழல்இனிது யாழ்இனிது என்ப – குறள்: 66

குழல்இனிது யாழ்இனிது என்ப

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குறள்: 66

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல்



கலைஞர் உரை

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர், புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர்.



மு. வரதராசனார் உரை

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

‘The pipe is sweet’, ‘the lute is sweet,’ by them ‘t will be averred,
Who music of their infants’ lisping lips have never heard.

 – Thirukkural: 66, The Wealth of Children, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.