குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
– குறள்: 504

– அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

 குணமுங் குற்றமுமாகிய இரண்டும் உடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து, அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து, அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக.



மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.

– Thirukkural: 504, Selection and Confidence, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.