ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
கலைஞர் உரை
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வினைத்திட்பத்தை ஆராய்த்தறிந்த அமைச்சருடைய கொள்கை; கேடு தரக்கூடிய வினைகளைச் செய்யாமையும் வினை செய்யுங்கால் தெய்வத்தால் நேர்ந்த இடையூற்றிற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டின் வழி, என்று கூறுவர் அரசியல் நூலார்.
மு. வரதராசனார் உரை
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
G.U. Pope’s Translation
‘Each hindrance shun’,’unyielding onward press, if obstacle be there’ These two define you way, so those that search out truth declare.
– Thirukkural: 662, Power of Action, Wealth
Be the first to comment