சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)
கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முயற்சிக்கலாம். உதவி தேவைப்படின், பெற்றோர் அல்லது ஆசிரியரின் உதவியுடன் இப்பயிற்சியை மேற்கொள்க!
இப்பயிற்சியின் முடிவில், மாணவர்களுக்கு ஐயம் ஏற்படுத்தும் வகையில் ஒன்று போல் தோற்றமளிக்கும் இரு வேறுபட்ட சொற்களுக்கு உள்ள வேறுபாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
குழந்தைகளே! பொதுவாக ஒன்று போல் மாயத்தோற்றமளிக்கும் சொற்களை நீங்கள் கூர்ந்து நோக்கி, அவற்றை சரியாக உச்சரித்துப் பழக வேண்டும். அப்போது, உண்மையில் ஒலி, எழுத்து மற்றும் பொருள் அளவில் அச்சொற்கள் வேறுபட்டு இருப்பதை நீங்கள் நன்கு உணரலாம்!
வரிசை எண் | முதல் சொல் | இரண்டாவது சொல் |
---|---|---|
1 | கண் | காண் |
2 | கல் | கால் |
3 | படம் | பட்டம் |
4 | பல்லி | பள்ளி |
5 | படி | படு |
6 | வடு | வடி |
7 | வடு | வாடு |
8 | கொடு | கோடு |
9 | கொக்கு | கொக்கி |
10 | வலி | வளி |
11 | அழகு | அலகு |
12 | பல் | பால் |
13 | பட்டு | பாட்டு |
14 | வட்டம் | வாட்டம் |
15 | அரை | அறை |
16 | அரம் | அறம் |
17 | களம் | கலம் |
18 | கோல் | கோள் |
19 | கொடை | கோடை |
20 | குடை | கொடை |
21 | குடம் | கூட்டம் |
22 | வழுக்கு | வழக்கு |
23 | கலம் | காலம் |
24 | பசி | பாசி |
25 | கொள் | கோள் |
26 | கொளத்தூர் | கௌதாரி |
27 | எரி | எறி |
28 | எரி | ஏரி |
29 | கரி | கறி |
30 | தண்டு | தாண்டு |
31 | கெண்டை | கொண்டை |
32 | வடை | வாடை |
33 | தடை | தாடை |
34 | குழம்பு | குளம்பு |
35 | வழி | வலி |
36 | கடை | காடை |
37 | கலை | களை |
38 | களை | காளை |
39 | அணை | ஆணை |
40 | வெல்லம் | வெள்ளம் |
41 | ஒலி | ஒளி |
42 | பனி | பணி |
43 | மழை | மலை |
44 | பதம் | பாதம் |
45 | மனம் | மணம் |
46 | வனம் | வானம் |
47 | கனம் | கணம் |
48 | சட்டை | சாட்டை |
Be the first to comment