மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- மாங்காய் = 2 (பெரியது)
- பச்சை மிளகாய் = 3
- காய்ந்த மிளகாய் =2
- தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி
- கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி
- உளுத்தம்பருப்பு = 2 மேசைக்கரண்டி
- இஞ்சி = சிறிய துண்டு
- பெருங்காயத்தூள் = சிறிதளவு
- கறிவேப்பிலை = சிறிது
- எண்ணெய் = 150 மி.லி
- கடுகு = சிறிது
- உப்பு = தேவைக்கேற்ப
- அரிசி = 1/2 கிலோ (பச்சரிசியாக இருந்தால் நல்லது)
செய்முறை
- முதலில் மாங்காயை நன்றாகக் கழுவி தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். துருவ முடியவில்லை என்றால் சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு லேசாக பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
- சாதத்தைக் குழையாமல் உதிரியாக சமைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுப்பைப் பற்ற வைத்து மெதுவாக எரியவிடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயைக் கிள்ளி அதில் போடவும். பின் கடுகு போட்டு வெடிக்கும் போது இஞ்சி பச்சை மிளகாய் இவற்றை அதில் போட்டு கிளறிவிடவும். அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றைப் போட்டுக் கிளறிவிடவும்.
- பருப்பு சிவந்து வரும் போது கறிவேப்பிலை, மாங்காய், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு கிளறிவிடவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். சிறிது உப்பைச் சேர்க்கவும். மாங்காய் அரை பதமாக வெந்தவுடன் பெருங்காயத் தூளைப் போட்டு இறக்கி, சமைத்த சாதத்தை அதில் போட்டு நன்றாகக் கிளறி மூடவும்.
இது மிகவும் சுவையாக இருக்கும். இதனுடன் தொட்டுக் கொள்ள கொத்தமல்லித் துவையல் நன்றாக இருக்கும்.
Be the first to comment