அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப – குறள்: 75

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
– குறள்: 75

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர்
அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை; அவர் முன்பு இங்கு அன்பொடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.



மு. வரதராசனார் உரை

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

 – Thirukkural: 75,The Possession of Love, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.