அறத்திற்கே அன்புசார்பு என்ப – குறள்: 76

Thiruvalluvar

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
– குறள்: 76

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை
அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக
இருப்பதாகக் கூறுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர். அவர் அறியார். அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.



மு. வரதராசனார் உரை

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.



G.U. Pope’s Translation

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

 – Thirukkural: 76, The Possession of Love, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.