எனைத்துணையர் ஆயினும் என்னாம் – குறள்: 144

Thiruvalluvar

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எத்துணை உயர்ந்தோராயினும் ; தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்; என்ன பயனுடைத்தாம்?



மு. வரதராசனார் உரை

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?



G.U. Pope’s Translation

How great soe’er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour’s wife.

 – Thirukkural: 144,Not Coveting Another’s Wife, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.