அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது. – குறள்: 165
– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்
கலைஞர் உரை
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு
பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை.
மு. வரதராசனார் உரை
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.
G.U. Pope’s Translation
Envy they have within! enough to seal their fate!
Though foemen fail, envy can ruin consummate
– Thirukkural: 165, Not envying, Virtues
Be the first to comment