கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.– குறள்: 184
– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.
மு. வரதராசனார் உரை
எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
G.U. Pope’s Translation
In presence though unkindly words you speak, say not, In absence words whose ill result exceeds your thought.
– Thirukkural: 184, Not Backbiting, Virtues
Be the first to comment