இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.– குறள்: 205
– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்
கலைஞர் உரை
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்வானாயின் மீண்டும் வறியனாவான்.
மு. வரதராசனார் உரை
`யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
G.U. Pope’s Translation
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
– Thirukkural: 205, Dread of Evil Deed, Virtues
Be the first to comment