தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் – குறள்: 212

Thiruvalluvar

தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

– குறள்: 212

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.



மு. வரதராசனார் உரை

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.



G.U. Pope’s Translation

The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone ’tis ours.

Thirukkural: 212, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.