பாத்துஊண் மரீ இயவனைப் – குறள்: 227

Thiruvalluvar

பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை.



மு. வரதராசனார் உரை

தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.



G.U. Pope’s Translation

Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger’s sickness sore shall never feel.

 – Thirukkural: 227, Giving, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.