தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது. – குறள்: 262
– அதிகாரம்: தவம், பால்: அறம்
கலைஞர் உரை
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ;ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.
மு. வரதராசனார் உரை
தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
G.U. Pope’s Translation
To ‘penitents’ sincere avails their ‘Penitence’;
Where that is not, ’tis but a vain pretence.
– Thirukkural: 262, Penance, Virtues
Be the first to comment