ஒன்னார்த் தெறலும் உவந்தாரை – குறள்: 264

Thiruvalluvar

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். – குறள்: 264

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு
வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் ; அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் ; எண்ணின் தவத்தோர் கருதுவாராயின் அவன் தவ வலிமையால் அவை கூடும்.



மு. வரதராசனார் உரை

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.



G.U. Pope’s Translation

Destruction to his foes, to friends increase of joy,
The ‘Penitent’ can cause if this his thoughts employ.

 – Thirukkural: 264, Penance, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.