அறவினை யாதுஎனின் கொல்லாமை – குறள்: 321

அறவினை யாதுஎனின் கொல்லாமை

அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
– குறள்: 321

– அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம்



கலைஞர் உரை

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை
செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; கொலைவினை பிற தீவினைகளெல்லாவற்றின் பயனையும் ஒருங்கே தரும்.



மு. வரதராசனார் உரை

அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.



G.U. Pope’s Translation

What is the work of virtue? ‘Not to kill’;
For ‘killing’ leads to every work of ill.

 – Thirukkural: 321, Not Killing, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.