குடம்பை தனித்துஒழியப் புள்பறந் – குறள்: 338

Thiruvalluvar

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338

– அதிகாரம்: நிலையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்
குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு ( வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்துபோன தன்மைத்தே.



மு. வரதராசனார் உரை

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short – lived friendship soul and body share.

 – Thirukkural: 338 , Instability, Virtues,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.