மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.புளியமரத்தில் ஏறலாம்.
புளியங்காயைப் பறிக்கலாம்.நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக்காயைப் பறிக்கலாம்.வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கிவழுக்கி விழுகலாம்!
Be the first to comment