குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609
– அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,
அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே ; அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.
G.U. Pope’s Translation
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.
– Thirukkural: 609, Unsluggishness, Wealth
Be the first to comment