பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963
– அதிகாரம்: மானம், பால்: பொருள்
கலைஞர் உரை
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை
மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான
உணர்வும் வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடிப் பிறந்தார்க்கும் தன்மானியர்க்கும் பெருமை நிறைதற்கேற்ற செல்வக் காலத்தில் யாவரிடத்தும் தாழ்மையாயிருத்தல் வேண்டும்; பெருமை குறைதற் கேதுவான வறுமைக் காலத்தில், அக்குறையை நிறைத்தற் பொருட்டுத் தாழ்மையில்லாதிருத்தல் வேண்டும்..
மு. வரதராசனார் உரை
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
G.U. Pope’s Translation
Bow down thy soul, with increase blest, in happy hour, Lift up thy heart, when stript of all by fortune’s power.
– Thirukkural: 963, Honour, Virtues
Be the first to comment