எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக் கண்டறியவும்.
1. தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு மொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது.
2. மனிதர்களின் சிந்தனைகல், காளம் கடந்து வால்வதர்கு எலுத்து மொழி உதவுகிரது.
3. மொழியின் உயிர் நாடியாக விலங்குவது பேச்சு மொழியே என்பர்.
4. பேசப்படும் சூழலைப் பொருத்து பேச்சு மொழியின் பொருல் வேறுபடும்.
5. பேச்சு மொழியை உளக வலக்கு என்றும், எழுது மொழியை இளக்கிய வலக்கு என்றும் கூறுவர்.
6. கல்வி ஓர் அழியா செள்வம்.
7. கல்வியில்லாத நாடு விளக்கிள்லாத வீடு.
இதற்கான விடைகளை அடுத்த பக்கத்தில் (பக்கம்-2) அறிந்து கொள்ளலாம்!
Be the first to comment