சிறிய வெங்காய ரசம்-செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி

சிறிய வெங்காய ரசம் – செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி

தேவையான பொருட்கள்

  • சிறிய வெங்காயம் 150 கிராம் 
  • புளி = 25 கிராம்
  •  காய்ந்த மிளகாய் = 3 
  • சமையல் எண்ணெய் = 50 கிராம்
  •  கடுகு = ஒரு தேக்கரண்டி
  •  மஞ்சள்தூள் = சிறிதளவு
  •  பெருங்காயத்தூள் = சிறிதளவு
  •  உப்பு = தேவைக்கேற்ப
  •  கறிவேப்பிலை = சிறிதளவு

செய்முறை

  1. முதலில் வெங்காயத்தை தோலுரித்து சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  2. புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். 
  3. பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். 
  4. எண்ணெய் காய்ந்தவுடன் மிளகாயைக் காம்பு கிள்ளி முழுசாக போடவும். 
  5. அதனுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும் .
  6. கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்
  7. வதங்கிய பின் புளியைக் கரைத்து அதில் ஊற்றவும்.
  8.  புளிப்பிற்குத் தகுந்த தண்ணீர் ஊற்றவும்.
  9. உப்பு சரியான அளவு போட்டு மஞ்சள் தூள் பெருங்காயத் தூளையும் போட்டு நன்றாகக் கொதித்த பின் இறக்கி விடவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.