கால்ஆழ் களரில் நரிஅடும் – குறள்: 500

Thiruvalluvar

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு.
– குறள்: 500

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,
சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன்மறவரைக் கோட்டாற் குத்திக்கோத்த மதயானைகளையும் ; அவை காலமிழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட விடத்து மிகச் சிறிய நரிகளும் அவற்றைக் கொன்று விடும் .



மு. வரதராசனார் உரை

வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.



G.U. Pope’s Translation

The jackal slays, in miry paths of foot – betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.

 – Thirukkural: 500, Knowing the Place, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.