நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. – குறள்: 670 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்வதில் உறுதியை விரும்பாத [ மேலும் படிக்க …]
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. – குறள்: 767 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரால் [ மேலும் படிக்க …]
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. – குறள்: 790 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment