வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

Thiruvalluvar

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
– குறள்: 542

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல
ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் .



மு. வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.



G.U. Pope’s Translation

All earth looks up to heav’n whence raindrops fall; All subjects looks to king that ruleth all.

 – Thirukkural: 542, The Right Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.