கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும். – குறள்: 566
– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்
பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் அவனது பெருஞ்செல்வம் நீடித்த லின்றி அப்பொழுதே கெடும்.
மு. வரதராசனார் உரை
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
G.U. Pope’s Translation
The tyrant, harsh in speach and hard of eye.
His ample joy, swift fading, soon shall die.
– Thirukkural: 566, Absence of Terrorism, Wealth
Be the first to comment