குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல். – குறள்: 696
– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க
காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செய்தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பையறிந்து;சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி;அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க.
மு. வரதராசனார் உரை
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.
G.U. Pope’s Translation
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.
– Thirukkural: 696 , Conduct in Persence of the King, Wealth
Be the first to comment