புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்
நன்குசெலச் சொல்லு வார். – குறள்: 719
– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச்
சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள
அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல்ல அறிஞரவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார்; அறிஞரில்லாச் சிறியோ ரவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லாதிருக்க.
மு. வரதராசனார் உரை
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.
G.U. Pope’s Translation
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought e’en in oblivious hour.
– Thirukkural: 719, The Knowledge of the Council Chamber, Wealth
Be the first to comment