உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு. – குறள்: 734
– அதிகாரம்: நாடு, பால்: பொருள்
கலைஞர் உரை
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்
பாராட்டப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற ) நல்ல நாடாம்.
மு. வரதராசனார் உரை
மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
G.U. Pope’s Translation
That is a land whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
– Thirukkural: 734, The Land, Wealth
Be the first to comment