மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும். – குறள்: 884
– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.
கலைஞர் உரை
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு
ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
புறத்தில் திருந்தியதுபோல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின்; அது அவனுக்குச் சுற்றம் துணையாகாமைக் கேதுவாகிய பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.
மு. வரதராசனார் உரை
மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.
G.U. Pope’s Translation
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.
– Thirukkural: 884, Enmity Within, Wealth.
Be the first to comment