பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் – குறள்: 912

Thiruvalluvar

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
குறள்: 912

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்
பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து அதைப்பெறும் பொருட்டுத் தாம் அன்புடையவராகச் சொல்லும் அன்பில்லா விலைமகளிரின் ; ஒழுக்க வகையை ஆராய்ந்தறிந்து அவரொடு கூடாது விடுக.



மு. வரதராசனார் உரை

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விடவேண்டும்.



G.U. Pope’s Translation

Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women’s worth, from their society depart.

Thirukkural: 912, Wanton Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.