நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணி புணர்பவர் தோள். – குறள்: 917
– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.
கலைஞர் உரை
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தீயவழியிற் செல்லாதவாறு மனத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலில்லாத ஆடவர்; காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளையும் ஆதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர் தோள்களைத் தழுவுவர்.
மு. வரதராசனார் உரை
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
G.U. Pope’s Translation
Who cherish alien thoughts while foldding in their feigned embrace,
These none approach save those devoid of virtue’s grace.
– Thirukkural: 917, Wanton Women, Wealth.
Be the first to comment