களித்தானைக் காரணம் காட்டுதல் – குறள்: 929

Thiruvalluvar

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
குறள்: 929

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை
கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளுண்டு வெறித்தவனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்குள் முழுகினவனை விளக்கொளியால் தேடிப்பார்த்தலை யொக்கும்.



மு. வரதராசனார் உரை

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.



G.U. Pope’s Translation

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave,
Is he who strives to sober drunken man with reasonings grave.

Thirukkural: 929, Not Drinking Palm – Wine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.