சிறியார் உணர்ச்சியுள் இல்லை – குறள்: 976

Thiruvalluvar

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம்என்னும் நோக்கு.
குறள்: 976

– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்
சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை.



மு. வரதராசனார் உரை

பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை



G.U. Pope’s Translation

‘As votaries of the truly great we will ourselves enroll,’
Is thought that enters not the mind of men of little soul.

Thirukkural: 976, Greatness, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.