உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதுஆம் ஒப்பு. – குறள்: 993
– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல: நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உயிரொடு பொருந்தாத முகவுறுப்பால் அல்லது முழுவுடம்பால் ஒத்திருப்பது ஒருவனுக்கு நன்மக்களை ஒக்கும் ஒப்பாகாது; உயிரொடு பொருந்தத்தக்க பண்பினால் ஒத்தலே உண்மையாக ஒக்கும் ஒப்பாம், ‘ஆல்’ அசைநிலை.
மு. வரதராசனார் உரை
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
G.U. Pope’s Translation
Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.
– Thirukkural: 993, Perfectness, Wealth
Be the first to comment