கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 458 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ளகூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; [ மேலும் படிக்க …]
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்ஏதில் பிணம்தழீஇ யற்று. – குறள்: 913 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். – குறள்: 450 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் நற்குணச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment