இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. – குறள்: 1041
– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்
கலைஞர் உரை
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்
துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; வருமையைப் போலத் துன்பந்தருவது வறுமையே, வேறொன்றுமில்லை.
மு. வரதராசனார் உரை
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,
G.U. Pope’s Translation
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
Thirukkural: 1041, Poverty, Wealth,
Be the first to comment