உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022- சாம்பியன் ஆனது அர்ஜெண்டினா (FIFA World Cup Qatar – 2022)

உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022

உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022 – FIFA World Cup Qatar – 2022

உலகக்கோப்பை கால்பந்து கோப்பை கடார் 2022-ஐ (FIFA World Cup Qatar – 2022) லியோனெல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸியின் (Lionel Andres Messi) தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்றது. நேற்று (18-டிசெம்பர்-2022) கடார் நாட்டின் தோஹா நகரில் நடந்த கால்பந்துக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் அமெரிக்க அணியான அர்ஜெண்டினாவும் ஐரோப்பிய முன்னாள் சாம்பியனுமான பிரான்சும் மோதின.

இருபத்திரெண்டாவது (22) உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸியின் முழு முயற்சியில் அவரின் தலைமையிலான அணி பிரான்சு அணியை வீழ்த்தியதன் மூலம் ஃபிஃபா (FIFA) உலக்கோப்பையை மூன்றாவது (3) முறையாக வென்றுள்ளது.

உலகமே எதிர்பார்த்தபடி, லியோனெல் மெஸ்ஸி அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த உலகக்கோப்பையை வென்று உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

முப்பத்தியாறு ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை மீண்டும் பெற்று, உலக சாம்பியன் ஆனதன் மூலம் மெஸ்ஸியின் அணி உலகில் உள்ள ரசிகர்களை மகிழ்வித்து, ஃபிஃபா உலககோப்பை கடார் -2022-ஐ இனிதே நிறைவு செய்தது. குறிப்பாக, உலகக்கால்பந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய மறைந்த டிகோ மாரடோனாவின் (Diego Maradona) கனவை நிறைவேற்றினார் மெஸ்ஸி.

இந்த உலகக்கோப்பை 2022-ல் அர்ஜெண்டினா அணியின் சாதனைகள்:

  • உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022 -ன் ஆட்ட நாயகனுக்கான தங்கப் பந்து விருது – லியோனெல் மெஸ்ஸி
  • உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022 -ன் வெள்ளி காலணி விருது – லியோனெல் மெஸ்ஸி
  • உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022 -ன் தங்க கையுறை விருது – எமிலியானோ மார்டினெஸ்
  • உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022-ன் சிறந்த இளம் வீரர் – என்ஸோ ஃபெர்னாண்டெஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.