சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க …]
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று. – குறள்: 208 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்குத் தீமையான [ மேலும் படிக்க …]
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர். – குறள்: 447 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்றுநடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
The kural can be sung as a song so that, the kural may reach to many people.