வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. – குறள்: 844
– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்
ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
விளக்கப் படம்:
கற்றது கை மண்ணளவு என்பதை உணர்த்துகிறது இந்த விளக்கப் படம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது,என்னது என்று வினவின்; அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம் பட்ட ஆணவம்.
மு. வரதராசனார் உரை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், யாம் அறிவுடையேம்
என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
G.U. Pope’s Translation
What is stupidity? The arrogance that cries,
‘Behold, we claim the glory of the wise.’
– Thirukkural: 844, Ignorance, Wealth.
Be the first to comment