எம்.பி.ஏ. (M.B.A.), எம்.சி.ஏ. (M.C.A.) மற்றும் எம்.இ. (M.E.) / எம்.டெக். (M.Tech.) / எம்.ஆர்க். (M.Arch.) / எம்.பிளான். (M.Plan) போன்ற முதுநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2019 – டான்செட் 2019 -TANCET-2019
தமிழ்நாடு அரசின் சார்பாக அண்ணா பல்கலைக் கழகம், சென்னை நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2019 – TANCET 2019) விண்ணப்பப் பதிவுகள் இணைய வழியில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட் கல்லூரிகளில் எம்.பி.ஏ. (M.B.A.), எம்.சி.ஏ. (M.C.A.) மற்றும் எம்.இ. (M.E.) / எம்.டெக். (M.Tech.) / எம்.ஆர்க். (M.Arch.) / எம்.பிளான். (M.Plan) போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளை, இந்தப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளலாம்.
- அண்ணா பல்கலைக் கழகத் துறைகள் (University Departments)
- அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகள் (University Colleges of Engineering)
- அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல வளாகங்கள் (Regional Campuses of Anna University)
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (Annamalai University)
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை & அறிவியல் கல்லூரிகள் – Government and Government Aided Colleges (Engineering, Arts & Science Colleges)
- சுயநிதிப் பொறியியல், கலை & அறிவியல் கல்லூரிகள் – Self-financing Colleges (Engineering, Arts & Science Colleges including stand-alone Institutions)
விண்ணப்பிக்க இறுதி நாள்
மேற்கண்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (Tamilnadu Common Entrance Test 2019 – TANCET 2019) எழுத, விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய இறுதி நாள்: 22-05-2019
மேலும், பொது நுழைவுத் தேர்வுக்கான, அண்ணா பல்கலைக் கழகத்தின் விளம்பர அறிக்கை, கல்வித் தகுதி, தகவல் கையேடு, இணைய வழிப் பதிவு முறைகள், நுழைவுத் தேர்வுத் தேதி, போன்ற விவரங்களை அறிய, கீழ்க்கண்ட அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்:
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (Tamilnadu Common Entrance Test 2019 – TANCET 2019)
Be the first to comment