தமிழ்நாட்டில் இளநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – Tamilnadu MBBS and BDS Admissions 2019

Tamilnadu MBBS BDS Admissions 2019

தமிழ்நாட்டில் இளநிலை பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவப் (பி.டி.எஸ்) பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – Tamilnadu MBBS and BDS Admissions 2019

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் நீட் தேர்வு எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களிடமிருந்து இளநிலைப் பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவப் (பி.டி.எஸ்.) பட்டப்படிப்புகளுக்கான (Tamilnadu MBBS and BDS Admissions 2019) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கீழ்க்கண்ட பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 20-ஜூன்-2019-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், இணைய வழியில் நிரப்பி விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, அச்சடித்து, கையேட்டில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 21-ஜூன்-2019-ஆம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்

  • தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகள்
  • ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை, ஈரோடு
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசுக்கான இடங்கள்
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட ராஜா முத்தைய்யா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம்
  • இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் பி.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர், கே.கே. நகர், சென்னை

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் கல்லூரி மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் உட்பட)

  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கல்லூரி மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் உட்பட)
  • கிருஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (வேலூர்) உள்ள கல்லூரி மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் உட்பட)

மேலும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கையேடு, கலந்தாய்வு, தேர்ந்தெடுக்கும் முறை, முக்கிய தேதிகள், பல்வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், கல்லூரிகளின் பட்டியல், போன்ற விவரங்களை அறிய அரசின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியைப் பார்க்கவும்:

விண்ணப்பங்களை நிரப்ப உதவி வேண்டும் மாணவர்கள் தமிழ்நாடு உதவி மையங்களை (Tamilnadu Facilitation Centers – TFCs) நேரில் அனுகலாம். இந்த உதவி மையங்களின் பட்டியலையும் (List of TFCs) தேர்ந்தெடுக்கும் குழு, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் காணலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.