இடும்பைக்கு இடும்பை படுப்பர் – குறள்: 623

Challenge

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
– குறள்: 623

- அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்

விளக்கம்

துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

உதாரணப்பட விளக்கம்

விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை நோக்கிக் கழுகு பறந்து வருவதைக் கண்டு; அஞ்சி, துன்பப்பட்டு, துவண்டு விடக்கூடாது. அந்த மீன் துணிவுடன் வேகமாக நீந்தித் தப்பித்துக் கொள்ளுமேயானால், கழுகுக்கு உணவு கிடைக்காமல் பசியுடன் துன்பப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.