மஹிந்திரா வழங்கும் அனைத்திந்திய திறனுக்கான கல்வி உதவித்தொகை – Mahindra All India Talent Scholarships (MAITS – 2019)
கே.சி. மஹிந்திரா கல்வி அறக்கட்டளை ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள பல்தொழில்நுணுக்கக் கல்லுரிகளில் (பாலிடெக்னிக் கல்லூரிகள் – Polytechnic Colleges) பட்டயப் படிப்பில் (டிப்ளமா – Diploma Courses) சேரும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை (Mahindra All India Talent Scholarships – MAITS – 2019) வழங்குகிறது. இந்த அறக்கட்டளை, இதுவரை இந்தியா முழுவதும் மொத்தம் 9640 பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது.
இந்த அறக்கட்டளை, ஆண்டுதோறும் திறன் படைத்த 550 மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் பத்தாயிரம் (ரூ. 10,000) வீதம் கல்வி பயிலும் மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூபாய் முப்பதாயிரம் (ரூ. 30,000) கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
கே.சி. மஹிந்திரா கல்வி அறக்கட்டளை, இந்த கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை தற்போது வரவேற்கிறது.
MAITS 2019 – விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள்
- மாணவர்கள் SSLC அல்லது HSC அதாவது 10 அல்லது 12 -ஆம் வகுப்பிற்கு இணையான படிப்பு முடித்து, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்தொழில்நுணுக்கக் கல்லுரிகளில் (Polytechnic Colleges) பட்டயப் படிப்பில் (Diploma Courses) சேர அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- SSLC அல்லது HSC அதாவது 10 அல்லது 12 -ஆம் வகுப்பிற்கு இணையான தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முன்னுரிமை
பெண்கள், வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், படைவீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தியாவின் 12 மையங்களில், இந்த நேர்காணல் நடைபெறும். மாணவர்களுக்கு நேர்காணல் மையத்துக்கு வர ஆகும் போக்குவரத்து செலவில் ஒரு குறிப்பிட்ட அளவு வரை அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள்
விண்ணப்பங்களை கே.சி. மஹிந்திரா அறக்கட்டளையின் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ தளத்தின் இணைய முகவரியைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
மேலும், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள் போன்றவற்றை மேற்கண்ட இணைய முகவரியில் / விண்ணப்பப் படிவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Be the first to comment