நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். – குறள்: 373
– அதிகாரம்: ஊழ், பால்: அறம்
கலைஞர் உரை
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்
அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் நுண்ணிய பொருள்களையுணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும், அவனுக்குப் பின்னும் அவ்வூழாலாகிய பேதைமையுணர்வே மேற்படும்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.
Be the first to comment