பொது துணை சேவையில் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான (நிலை- 2) வேலைவாய்ப்பு – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Recruitment of Assistant Tourist Officers (Grade – II) in General Subordinate Service – TNPSC
தமிழ்நாடு பொதுத் துணை சேவையில் (Tamilnadu Subordinate Services) உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு (நிலை-2 – Assistant Tourist Officer – Grade-II) மொத்தம் 42 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
- பதவி – உதவி சுற்றுலா அலுவலர் (தர வரிசை – 2) – Assistant Tourist Officer – Grade-II
- ஊதியம் – ரூ. 19500 – ரூ. 62000 (நிலை – 8 – Level – 8)
- கல்வித் தகுதி
- பயணம் மற்றும் சுற்றுலா பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு (Degree in Travel and Tourism) (அல்லது) ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் சுற்றுலா பிரிவில் பட்டயப் படிப்பு (Any Degree with Diploma in Tourism)
- தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் கணினி அலுவலகத் தானியக்கச் சான்றிதழ் படிப்பு (Certificate Course of Computer on Office Automation) அல்லது அதற்கு இணையான படிப்பு
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை – இளநிலைப்பட்டப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 20-ஆகஸ்டு-2019
மேலும் கல்வித்தகுதி பற்றிய விரிவான விவரங்கள், தேர்வு நாள், இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, பணியிட ஒதுக்கீடு, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற விவரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ்க்கண்ட இணைய முகவரியைப் பார்க்கவும்:
- டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (http://www.tnpsc.gov.in/latest-notification.html)
- டி.என்பி.எஸ்.சி. அறிவிக்கை எண் 22/2019, தேதி-22-07-2019
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதனால், டி.என்.பி.எஸ்.சி -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்த்து, புதிய அறிவிப்புகள் / மாற்றங்கள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ளவும்.
Be the first to comment